திபெத்தில் நிலச்சரிவால் உருவான புதிய ஏரி: பெருவெள்ள அபாயத்தால் நேபாளத்தில் தீவிர பதற்றம்!

திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து புதிதாக உருவான இயற்கை ஏரி (Barrier Lake) காரணமாக, சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் மீண்டும் பெருவெள்ள அபாயம் ஏற்பட்டு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் விளைவாக நீர் ஓட்டம் அடைபட்டு இந்த ஏரி போன்ற அமைப்பு உருவானது. தற்போது இந்த செயற்கை ஏரியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வெளியேறி வருவதாக சீன அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஏரி திடீரென உடையும் பட்சத்தில், கரையோரப் பகுதிகளில் பேரழிவு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து, திபெத் பகுதியில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏரி உடையும் பட்சத்தில் நேபாளத்தின் தாழ்வான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், எல்லைப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top