நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தைக் கணித்து, நேபாளத்திற்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க சீனா தவறிவிட்டதா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
இதுகுறித்து நேபாள அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், “வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான மூலகாரணம் குறித்துத் திபெத் மற்றும் சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், அவர்களாலும் இதுவரை இதற்கான சரியான காரணத்தைக் கூற இயலவில்லை” என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இயற்கை பேரிடரின் தொடக்கம் நேபாளப் பகுதியில் அமைந்ததா அல்லது திபெத் எல்லையை நோக்கி அமைந்ததா என்பதை உறுதி செய்வதிலும் குழப்பம் நீடித்து வருகிறது.
எல்லை தாண்டிய நதிகளின் நீர்வரத்து குறித்த தகவல்களைப் பகிர்வதில் சீனா தாமதம் காட்டியதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளிடையே தூதரக ரீதியான புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.