45 நாளில் பணம் இரட்டிப்பு! ஆசை காட்டி பல கோடி சுருட்டிய ‘கிரிப்டோ’ செயலி – தென் மாவட்டங்களில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ‘எஃப்.கியூ.எல்’ (FQL) என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். தொடக்கத்தில் சிலருக்கு கூறியபடி லாபத் தொகையை திருப்பிக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த நிறுவனம், பல கோடி ரூபாயைச் சேர்த்தவுடன் திடீரென செயலியை முடக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற போலியான ஆன்லைன் முதலீட்டு செயலிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top