ரூ.22,000 கோடி கடனில் 99.97% தள்ளுபடி! தொழிலதிபருக்கு சலுகை வழங்கிய என்சிஎல்டி: அதிர்ச்சியில் வங்கிகள்!

தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான கடன் நிலுவை வழக்கில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தொகையில், சுமார் 99.97 சதவீதத்தை தள்ளுபடி செய்துவிட்டு, வெறும் 6.5 கோடி ரூபாயை மட்டும் செலுத்துமாறு என்சிஎல்டி உத்தரவிட்டுள்ளது.

இந்த அசாதாரண உத்தரவு, பொதுத்துறை வங்கிகளுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என நிதித்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் சேமித்து வைத்த வைப்புத் தொகையும், நாட்டின் வரிப் பணமும் இந்த அளவுக்குத் தள்ளுபடி செய்யப்படுவது சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பெரு நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்கள் மிக எளிதாகத் தள்ளுபடி செய்யப்படுவதும், எளிய மக்களின் சிறிய கடன்களுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் எந்த வகையில் நியாயம் என வங்கியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் தற்போது தேசிய அளவில் பெரும் அதிர்வலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top