ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடி செலுத்தினால் போதும்: தொழிலதிபர் வழக்கில் என்.சி.எல்.டி உத்தரவால் வெடித்த சர்ச்சை!

பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான கடன் நிலுவை வழக்கில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள உத்தரவு நிதித்துறையிலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நிலுவைக் கடனில் 99.97 சதவீதத் தொகையைத் தள்ளுபடி செய்து, வெறும் 6.5 கோடி ரூபாயை மட்டும் செலுத்த என்.சி.எல்.டி அனுமதி அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மக்கள் பணத்தில் பெறப்பட்ட இந்த பிரம்மாண்டமான கடன் தொகையில், வெறும் 0.03 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்படுவது கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. எளிய மக்கள் வாங்கும் சிறு கடன்களுக்கு வங்கிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில், பெரும் தொழிலதிபருக்கு இவ்வளவு பெரிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவால் அரசுக்கும் வங்கிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் வங்கி விதிகளின் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top