ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடி செட்டில்மென்ட்? தொழிலதிபர் சுபாஷ் சந்திரா வழக்கில் NCLT உத்தரவு!

பிரபல தொழிலதிபரும் ஜீ குழுமத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சுபாஷ் சந்திராவிடம் கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கோரிய மொத்தக் கோரிக்கைத் தொகை ரூ.22,006.57 கோடியாகும்.

இந்நிலையில், இந்த பிரம்மாண்டமான கடனைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தில், கடன் வழங்கியவர்களுக்கு வெறும் ரூ.6.25 கோடியும், திவால் நடவடிக்கைச் செலவுகளுக்காக ரூ.25 லட்சமும் மட்டுமே அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தக் கடனில் மிகச் சிறிய அளவிலான ரூ.6.5 கோடி மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட உள்ளது.

இவ்வளவு பெரிய கடன் தொகையில் சொற்பத் தொகை மட்டுமே திருப்பிச் செலுத்தப்படும் வகையிலான இந்தத் தீர்வுத் திட்டம், கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர்களின் திவால் வழக்குகளில் இத்தகைய நடைமுறைகள் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இது தொடர்பாக NCLT புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top