ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடியா? தொழிலதிபர் சுபாஷ் சந்திரா வழக்கில் என்சிஎல்டி அதிரடி உத்தரவு!

பிரபல தொழிலதிபரும் எஸ்ஸெல் குழுமத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு வாரியம் (NCLT) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரது கடன்களை தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் குறித்து இந்த உத்தரவில் முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் நடவடிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கடன் கோரிக்கை தொகை ரூ.22,006.57 கோடியாகும். ஆனால், கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வெறும் ரூ.6.25 கோடியை மட்டுமே திருப்பியளிக்கவும், இந்த திவால் நடவடிக்கைகளுக்கான செலவுகளுக்காக ரூ.25 லட்சத்தை ஒதுக்கவும் அந்த தீர்வுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடனுக்கு, வெறும் 6.5 கோடி ரூபாய் மட்டுமே திருப்பிச் செலுத்த முன்வந்திருப்பது நிதித்துறை மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்வுத் திட்டத்தின் செல்லுபடித் தன்மை மற்றும் கடன் அளித்தவர்களின் நிலைப்பாடு குறித்து என்சிஎல்டி அமர்வு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top