நேபாளத்தில் அற்புதம்: சுரங்கத்தில் 9 நாட்கள் உயிருடன் போராடிய 2 பேர் பத்திரமாக மீட்பு!

நேபாளத்தில் சுரங்கப்பாதைக்குள் கடந்த 9 நாட்களாகச் சிக்கி உயிருக்குப் போராடி வந்த இரண்டு நபர்கள் அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, சுரங்கப்பாதைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தன. இதில் நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுவினர் ஆபத்தான சுரங்கப்பாதைக்குள் நேரடியாக இறங்கித் தங்களின் தீவிர மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். சுரங்கத்தின் ஆழமான பகுதியிலிருந்து மனிதர்களின் குரல்கள் மெலிதாகக் கேட்பதாக வந்த தகவல், மீட்புக் குழுவினருக்கு ஒரு பெரிய நம்பிக்கைக் கீற்றாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, நவீன கருவிகளின் உதவியோடு மீட்புக் குழுவினர் மிகச் கவனமாகச் செயல்பட்டு, 9 நாட்களாக இருளுக்குள் தவித்த இருவரையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். போதிய உணவோ வெளிச்சமோ இன்றி 9 நாட்கள் சுரங்கத்திற்குள் உயிருடன் போராடி மீண்ட இந்தச் சம்பவம், மீட்புப் படையினரின் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top