ஈபிள் கோபுரத்தில் பெண்கள் புறக்கணிப்பு: சர்வதேச அளவில் வெடித்த பிஏபிஎஸ் சர்ச்சை – இந்து மதத்தின் பிம்பம் பாதிக்குமா?

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில், பிஏபிஎஸ் (BAPS) இந்து மத அமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நிகழ்வில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை, உலகளவில் இந்து மதத்தின் பிம்பத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களிடையே வலுவாக எழுந்துள்ளது. பாலின சமத்துவத்திற்கு எதிராக அமைந்த இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இது குறிப்பிட்ட அமைப்பின் மரபு சார்ந்த நடைமுறையே தவிர, ஒட்டுமொத்த இந்து மதத்தின் கருத்து அல்ல என்று மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இருப்பினும், சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் இந்தச் சர்ச்சை, மத நம்பிக்கைகளுக்கும் பெண்களுக்கான உரிமைகளுக்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top