சௌதிக்கு ஆபத்து வந்தும் ‘மெக்கா ஒப்பந்தத்தை’ பாகிஸ்தானும் துருக்கியும் செயல்படுத்தாதது ஏன்? பின்னணி தகவல்!

சௌதி அரேபியா மீது யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், அந்நாட்டிற்கு ஆதரவாக பாகிஸ்தானும் துருக்கியும் தங்களது ராணுவத்தை களமிறக்காதது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ‘மெக்கா ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட நாடுகளாக இருந்தும், இவ்விரு நாடுகளும் தற்போதைய சூழலில் அமைதி காப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய சர்வதேச அரசியல் காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான முறையான சூழலோ அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு எதிரியோ இல்லாததே இதற்குக் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களைத் தங்களது நேரடி எதிரியாக பாகிஸ்தானோ அல்லது துருக்கியோ கருதவில்லை. இதன் காரணமாகவே, சௌதி அரேபியாவிற்கு ராணுவ ரீதியான உடனடி உதவிகளை உடனடியாக அனுப்பாமல், இரு நாடுகளும் தற்காப்புப் போக்கைக் கடைப்பிடித்து அமைதி காத்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top