டெல்லியில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு, உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. வல்லரசு நாடான சீனாவின் பெருகிவரும் தன்னிச்சையான செல்வாக்கு மற்றும் ஆதிக்கம், இந்த மாநாட்டில் இந்தியாவிற்குப் பெரும் சர்வதேச ராஜாங்க சவாலாக உருவெடுத்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் நீடிக்கும் தீவிரமான போச்சூழல் மற்றும் ரஷ்யா – யுக்ரேன் இடையேயான போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பொருளாதார மறுசீரமைப்பு, உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலை மற்றும் உலகளாவிய அமைதியை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கு மாநாட்டில் ஓங்காமல் தடுத்து, ‘க்ளோபல் சவுத்’ எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் முதன்மை குரலாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பதை உலக தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.