பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இச்சம்பவம் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பிறந்து வளர்ந்த சாலமன் பாப்பையா, தனது எளிய தமிழ் பேச்சினாலும், நகைச்சுவை தும்பும் பட்டிமன்ற நடுவர் பணியினாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி, பட்டிமன்றக் கலையை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவரைச் சாரும். தொலைக்காட்சி வாயிலாக பட்டிமன்றத்தை வீடுகள் தோறும் புகழ்பெற்ற கலையாக மாற்றியதில் இவருக்கு முதன்மையான பங்கு உண்டு.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.