தாயின் ஓய்வூதியப் பணத்தையும் அரசு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து பெறுவதற்காக, அவரது உடலை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த மகனுக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த தாயின் ஓய்வூதியத் தொகையைத் தடையின்றிப் பெற நினைத்த அந்த நபர், தாயின் மறைவை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக உடலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். இதன் மூலம் பல மாதங்களாக அரசின் நலத்திட்டப் பணத்தையும் அவர் முறைகேடாகப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், தாயின் உடல்நிலை மற்றும் பராமரிப்பு தொடர்பாக மருத்துவர் ஒருவருக்கு எழுந்த நியாயமான சந்தேகம், இந்த அதிர்ச்சி சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மருத்துவர் அளித்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மகன் செய்த கொடூர காரியம் அம்பலமானது. அரசாங்கத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நீதிமன்றம் அவருக்குத் தற்போது தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.