உலக வல்லரசு நாடான அமெரிக்கா, விண்வெளியில் தனது சக்திவாய்ந்த ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கும், விண்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என அமெரிக்க விமானப்படைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
அதேவேளையில், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள் எவ்வாறு இயங்கும், எதிரிகளின் செயற்கைக்கோள்கள் அல்லது பூமிப் பகுதிகளை எவ்வாறு தாக்கும் என்பது குறித்த பல்வேறு ஊகங்களும் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளன. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு, விண்வெளியை அடுத்த கட்ட போர்க்களமாக மாற்றுமோ என்ற அச்சத்தையும் உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.