தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு உரிய அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதி ஆணைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளின் முழு பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.