ரூ.100 கோடி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் ரூ.100 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சமாகப் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கைத் தொடர்ந்து, அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு மற்றும் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்பில் மகேஷ், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு பாயந்துள்ள இந்த வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top