ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகள் மசோதாவை அமெரிக்கா தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய மசோதாவின் மூலம், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எரிபொருட்களை வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்ய போருக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி சட்டத்திருத்தம் இந்தியப் பொருளாதாரத்தில் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.