பிரிட்டனில் காணாமல் போன பேச முடியாத 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ் என்பவனைத் தேடும் தீவிரப் பணியில் 1,300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், காவல் துறையினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இறுதியில் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் நோவா வுட்ஸ் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவனால் பேச முடியாது என்பதால் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாகப் பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நவீன ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இணைந்து காடுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் தீவிரமாகத் தேடி வந்தனர்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தேடுதல் குழுவினர் ஒரு சிறுவனின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். அது காணாமல் போன நோவா வுட்ஸின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.