பேஸ்புக் காதலிக்காக தங்கச் சங்கிலியைக் கொடுத்து படகில் இலங்கை சென்ற ஈரோடு சிறுவன்! பரபரப்பு பின்னணி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, முகநூல் (Facebook) மூலமாக இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், காதலியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தீவிர ஆசையில் அந்த சிறுவன் ஆபத்தான முடிவை எடுத்துள்ளான்.

இதற்காகத் தனது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலியைப் படகு ஓட்டியிடம் கூலியாகக் கொடுத்து, சட்டவிரோதமாகக் கடல் வழியாக இலங்கைச் சென்றுள்ளான். இலங்கையில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித்திரிந்த அச்சிறுவனை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தியபோதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

சிறுவனின் ஆபத்தான பயணத்தின் உண்மைப் பின்னணியை அறிந்த அதிகாரிகள், தற்போது அவனைத் தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளக் காதலால் சிறுவன் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top