செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு எது மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கும் என்பது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் புதிய கோணத்தில் எச்சரித்துள்ளனர். இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக புத்திசாலித்தனமாகவும் சக்திவாய்ந்தவையாகவும் மாறுவது மட்டுமே ஆபத்து அல்ல; மாறாக, அவற்றின் பயன்பாட்டின் மீது மனிதர்கள் கொண்டுள்ள கட்டுப்பாட்டை இழப்பதே உண்மையான அச்சுறுத்தலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, அவற்றின் முடிவுகளை தட்டிக் கேட்கும் அல்லது ‘வேண்டாம்’ என்று மறுக்கும் திறனை மனிதர்கள் தங்கள் பலவீனத்தால் இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொழில்நுட்பத்தின் மீதான அளவுக்கு அதிகமான சார்ந்திருத்தல், மனிதர்களின் சிந்திக்கும் திறனையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் படிப்படியாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இயந்திரங்களின் அதிவேக வளர்ச்சியை விட, மனிதர்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டையும் சுய சிந்தனையையும் தக்கவைத்துக்கொள்வதே தற்போதைய அவசியத் தேவையாகும்.