அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்று மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும், கல்வியை தடங்கலின்றி தொடரச் செய்யவும் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. விரிவாக்க திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதல்வர், மாணவர்களுக்கு நேரில் உணவை பரிமாறியதுடன், தாமும் அவர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தினார். அப்போது மாணவர்களின் படிப்பைப் பற்றியும், உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
இத்திட்டத்தின் மூலம் மேலும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த நெகிழ்ச்சியான அணுகுமுறை பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.