11 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க பயணம்: இழப்புகளைத் தாண்டி சீனாவின் மகா சக்தியான ஷி ஜின்பிங்!

சீனாவின் மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் அதிபர் ஷி ஜின்பிங், 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளின் பார்வையை ஈர்த்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் பின்னணியில், ஷி ஜின்பிங்கின் சவால்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

வசதியான அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஷி ஜின்பிங். இருப்பினும், சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது இவரது குடும்பம் அனைத்து அதிகாரங்களையும் இழந்து கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தது. அனைத்து வசதிகளையும் இழந்த அவர், கிராமப்புறங்களில் கடினமான சூழ்நிலையில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார். அத்தகைய சோதனைகளைக் கடந்து, தனது விடாமுயற்சியால் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து நாட்டின் உச்சபட்ச தலைவரானார்.

இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசான சீனாவைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஷி ஜின்பிங், சர்வதேச அரசியலில் மிக முக்கியக் சக்தியாகத் திகழ்கிறார். அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலில் பதற்றங்கள் நிலவும் இந்த வேளையில், இவரது தற்போதைய அமெரிக்கப் பயணம் உலகளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top