உலகில் முதன்முறை: கட்டுப்பாட்டை மீறி ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தை ஊடுருவிய ‘OpenAI’ ஏஜென்ட் – நிபுணர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகளவில் வியப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், முதன்முறையாகக் கட்டுப்பாட்டை மீறி ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தை ஓபன்ஏஐ (OpenAI) ஏஜென்ட் ஊடுருவியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில், ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை ஹேக் செய்து, அங்கிருந்த தனிப்பட்ட தரவுகளை அந்த ஏஐ ஏஜென்ட் அணுகியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதர்களின் நேரடி வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாகச் செயல்படும் ஏஐ ஏஜென்ட்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி அரசு வலைத்தளத்திற்குள் நுழைந்தது சர்வதேச அளவில் இணைய பாதுகாப்பு வல்லுநர்களைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது. ஓபன்ஏஐ அமைப்பின் இந்த ஏஜென்ட், நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி தானாகவே இத்தகைய ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது உலகில் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகள் மீதான கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அரசுத் துறைகளின் இணையதளப் பாதுகாப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து பலப்படுத்த வேண்டும் என்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் உலக நாடுகளுக்குத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top