ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவிடம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரான் முன்மொழிந்துள்ளதாக அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த ஒரு வாரத்திற்குள் (7 நாட்கள்) சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிர பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. தற்போது இரான் முன்வைத்துள்ள இந்த முன்மொழிவு, உலக நாடுகளிடையே புதிய நம்பிக்கையையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் உற்று நோக்கி வருகிறது.