ரத்தம் மூலம் பரவும் கொடூர போதை பழக்கம்: ஃபிஜியை உலுக்கும் ‘ப்ளூடூத்திங்’ விபரீதம்!

ஃபிஜி தீவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக அங்கு தேசிய அவசரநிலை அமலில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அங்கு தீவிரமடைந்து வரும் ‘ப்ளூடூத்திங்’ (Bluetoothing) எனப்படும் விபரீதமான போதைப்பொருள் பயன்பாட்டு முறை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியளிக்கும் முறையில், போதைப்பொருளைப் பயன்படுத்தி தீவிர போதை நிலையில் இருக்கும் ஒருவரின் உடலிலிருந்து ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து, அதை போதை தேவைப்படும் மற்றொரு நபரின் உடலில் நேரடியாகச் செலுத்துகின்றனர். இதன் மூலம் இரண்டாம் நபரும் போதை நிலையை அடைவதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருளின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாகவே இத்தகைய உயிர்பறிக்கும் ஆபத்தான நடைமுறையை போதைக்கு அடிமையானவர்கள் மேற்கொள்கின்றனர்.

இந்த ‘ப்ளூடூத்திங்’ முறை மிகவும் அபாயகரமானது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம் எச்.ஐ.வி (HIV), ஹெபடைடிஸ் போன்ற கொடூரமான நோய்த்தொற்றுகள் மிகவேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பொருந்தாத ரத்த வகை செலுத்தப்படுவதால் ரத்தம் உறைந்து உடனடியாக மரணம் சம்பவிக்கும் என சுகாதார அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top