இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைச் சாதுரியமாகக் கையாண்டு, பெரும் விபத்தைத் தடுத்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்குச் சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டி வருகின்றன.
விமானத்தில் பயணித்த பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில், ஆபத்தான சூழலிலும் மிகச் திறமையாகச் செயல்பட்டு விமானத்தை அவர் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இவரது இந்த துணிச்சலான செயலைச் சர்வதேச முன்னணி செய்தி நிறுவனங்கள் முதன்மைச் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி வருகின்றன.
நெருக்கடியான நேரத்தில் பதற்றமின்றி முடிவெடுத்து, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மித்தின் இந்த சாதனை, உலகளவில் இந்திய விமானிகளின் தொழில்முறைத் திறனுக்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைந்துள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.