நடுவானில் திடுக்கிடும் தாக்குதல்: இந்திய கேப்டனை கோடாரியால் தாக்க முயன்ற துணை விமானி – வெளியான அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் நோக்கிப் பயணித்த ஃப்ளைதுபை (Flydubai) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது அவசரகாலக் கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது திடீரென அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட துணை விமானி, காக்பிட் (Cockpit) கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு விமானத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுள்ளார். மேலும், விமானத்தின் காக்பிட்டில் அவசர கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு, இந்திய கேப்டனான ஸ்மித் மச்சாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலிலும் பதற்றமடையாமல் மிகுந்த மனத்துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய கேப்டன், துணை விமானியைத் திறம்பட மடக்கிப் பிடித்து காக்பிட் கதவைத் திறக்கச் செய்துள்ளார். இதன் மூலம் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்ட அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top