துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஃப்ளைதுபை (Flydubai) பயணிகள் விமானத்தில் நடுவானில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தைக் கடத்தும் நோக்கில், அதன் துணை விமானி திடீரெனக் கட்டுப்பாட்டைத் தனது கைக்குள் கொண்டுவர முயன்றுள்ளார். அப்போது, விமானத்தில் அவசர காலப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு, அங்கிருந்த முதன்மை இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலும், அஞ்சாமல் சுதாரிப்பாகச் செயல்பட்ட இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார், காக்பிட் கதவைத் திறந்து ஆபத்தான சூழலிலிருந்து விமானத்தையும் பயணிகளையும் மீட்டுள்ளார். நடுவானில் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்ட இந்த விமானக் கடத்தல் முயற்சி, இந்திய விமானியின் தைரியமான நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.