போலியான ஸ்கேன் படம், அழும் சத்தம்! இல்லாத 2 குழந்தைகளை காட்டி ரூ.38 லட்சம் மோசடி செய்த பிரிட்டன் பெண்!

பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதாகக் கூறி, தனது முன்னாள் துணையை நம்பவைத்து ரூ.38 லட்சம் வரை பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையில் குழந்தைகளே பிறக்காத நிலையில், போலியான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படங்கள், புகைப்படங்கள் மற்றும் குழந்தைகள் அழும் ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தி அந்தப் பெண் இந்தத் தந்திரமான நாடகத்தை ஆடியுள்ளார்.

இந்த விசித்திரமான மோசடி வழக்கை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்ற நீதிபதி, இது ஒரு ‘மிகவும் அசாதாரணமான’ மற்றும் ‘மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை’ என்று வர்ணித்துள்ளார். தனது முன்னாள் துணையின் உணர்வுகளோடு விளையாடி, அவரிடமிருந்து சிறுகச் சிறுக பெரும் தொகையைப் பறிப்பதற்காக அந்தப் பெண் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளார் என்பது நீதிமன்ற விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top