“500 மரண தண்டனைகளை பார்த்திருக்கிறேன்!” – அமெரிக்க செய்தியாளரின் உரையவைக்கும் அனுபவம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை நேரில் சென்று செய்தியாகப் பதிவு செய்துள்ளார் மூத்த செய்தியாளர் மைக்கேல் கிராசிக். பிரபல அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் விதம் மற்றும் அதுகுறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

தனது நீண்டகால செய்திப் பணியில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளின் இறுதி தருணங்களை மிக அருகில் இருந்து பார்த்துள்ள மைக்கேல் கிராசிக், அண்மையில் அளித்த பேட்டியில், “எனது வாழ்நாளில் 500 மரண தண்டனைகளை நேரில் பார்த்துள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மரண தண்டனைகள் குறித்த விவாதத்தை மீண்டும் உலகளவில் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top