பரபரப்பு! இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி கைது – அதிரடி பின்னணி!

இலங்கை அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபரும், மூத்த அரசியல் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தினர் மீது பல்வேறு லஞ்ச மற்றும் ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top