அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோதும், இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் என்ற பெண் கைதி தற்போது சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக்கிற்கு, விஷ ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முயன்றது. ஆனால், இருமுறை மேற்கொள்ளப்பட்ட மரண தண்டனை முயற்சிகளின் போதும் அவர் உயிர் தப்பியது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த கிறிஸ்டா பைக் தற்போது முழு சுயநினைவை பெற்றுள்ளதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராகி வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையில் இருந்து இருமுறை தப்பி, தற்போது சுயநினைவுக்கு திரும்பியுள்ள இந்த நிகழ்வு அமெரிக்க குற்றவியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.