மரண தண்டனையிலும் தோற்ற விஷ ஊசி! 2 முறை உயிர் பிழைத்து அதிர்ச்சி அளித்த அமெரிக்க பெண் கைதி!

அமெரிக்காவில் கொடூரக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி கிறிஸ்டா பைக், விஷ ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்றும் இரண்டு முயற்சிகளிலும் ஆச்சரியப்படும் விதமாக உயிர் தப்பியுள்ளார்.

இரண்டு முறை விஷ ஊசி செலுத்தப்பட்ட பிறகும் ஆபத்தான கட்டத்தைக் தாண்டி, தற்போது அவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஷ ஊசி செலுத்தப்பட்டும் ஒரு கைதி தொடர்ந்து உயிருடன் இருப்பது அமெரிக்க நீதித்துறையிலும் மருத்துவ உலகிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ள கிறிஸ்டா பைக்கின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மரண தண்டனை முயற்சியிலும் அவர் எவ்வாறு உயிர் பிழைத்தார் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top