தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தலாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இத்தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசின் நிர்வாகம் மற்றும் மக்கள் ஆதரவிற்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இத்தேர்தல் களமானது தவெக அரசுக்கான முதல் ‘அக்னிப்பரீட்சை’ என்று அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கண்காணிப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்ட சுற்றுகளிலேயே தவெக, திமுக, அதிமுக ஆகிய முன்னணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால், இந்தத் தேர்தல் முடிவு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.