மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது.
கடந்த நான்கு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் முக்கிய மதிப்பீடாகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தவெக, திமுக மற்றும் அதிமுக இடையே கடும் முக்கோணப் போட்டி நிலவிய நிலையில், தொகுதி மக்கள் யாருக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அனைத்து முகவர்களின் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட முன்னிலை விவரங்கள் உடனுக்குடன் வெளியாகி வரும் நிலையில், இந்த அக்னிப்பரீட்சையில் தவெக வெற்றி பெற்று தன் செல்வாக்கை நிருபிக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் சவால் அளிக்குமா என்ற ஆவலில் தமிழக மக்கள் காத்துள்ளனர்.