சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலால் விமான நிலையத்தின் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள அமைதிப் பகுதியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் ஒரு மிகப்பெரிய “போர்க் குற்றம்” என்று சவூதி அரேபியா தலைமையிலான ராணுவக் கூட்டணி மிகக் கடுமையாகக் சாடியுள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவைக் குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும், சர்வதேச விமான நிலையத்தில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.