230 அடி ஆழ்துளைக் கிணற்றில் சாதுரியம்: 5 வயது குழந்தையைத் துணிச்சலாக மீட்ட 11 வயது சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் 230 அடி ஆழமுள்ள ஆபத்தான ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய 5 வயது குழந்தையை, 11 வயது சிறுவன் ஒருவன் தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டில் மீட்புப் பணிகளுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் குறைவாக உள்ள சூழலில், ஆபத்தான தருணங்களில் உள்ளூர் மக்களே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 230 அடி ஆழமுள்ள குறுகிய ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. அக்குழந்தையைக் காப்பாற்ற 11 வயது சிறுவன் ஒருவன் தன்னார்வத்துடன் முன்வந்தான். கயிறு மூலம் தலைகீழாகக் கிணற்றுக்குள் இறக்கப்பட்ட அந்தச் சிறுவன், மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு ஆழத்தில் உயிருக்குப் போராடிய குழந்தையைப் பத்திரமாக மீட்டு மேலே வந்தான். உயிரைப் பணயம் வைத்து அசாத்திய துணிச்சலைக் காட்டிய அந்தச் சிறுவனுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top