மதம் மாறிய பின் பழைய இடஒதுக்கீடு பெற முடியாது! உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒரு நபர், தான் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இடஒதுக்கீட்டைப் பெற உரிமையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 15) உறுதி செய்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமியராக மதம் மாறிய பிறகு, தான் முன்பு வகித்த சாதி அடையாளத்தைக் காட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறும்போது, முந்தைய மதத்தில் அனுபவித்த சாதி சார்ந்த அடையாளங்களும் அதற்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகளும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும் அதில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top