“இஸ்லாமியராக மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது!” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இடஒதுக்கீட்டைப் பெற உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (அக்டோபர் 15) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவும் போது, அவர் தனது முந்தைய சாதியடையாளத்தையும் அதன் மூலம் கிடைத்த சமூகப் பின்னடைவையும் இழக்கிறார் என்பதால், பழைய சமூகத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டுச் சலுகைகளைக் கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மதமாற்றத்திற்குப் பிறகு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தொடருமா என்பது குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கிய உத்தரவு பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top