தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார். இச்சம்பவம் தமிழ் திரையுலகினரையும், அவரது கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் ஆழந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, அஜித்தின் ‘ஆசை’, ‘வாலி’ என 90-களில் வெளியான பல வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு இசையமைத்து, பட்டிதொட்டி எங்கும் தனது இசையால் ராஜ்யம் செய்தவர் தேவா. சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், கானா பாடல்களை தமிழ் திரையிசையில் ஒரு தனி அலையாக உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்த திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தேவாவின் இசை என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும்.