90 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் மர்மம்: மாயமான பெண் விமானியைத் தேடி ‘ராட்சத நண்டுகள்’ தீவில் தீவிர ஆய்வு!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பெண் விமானியான அமீலியா ஏர்ஹார்ட், கடந்த 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் விமானத்துடன் மர்மமான முறையில் மாயமானார். சுமார் 90 ஆண்டுகள் கடந்த பின்னரும், உலகின் மிகப்பெரிய வான்வழி மர்மங்களில் ஒன்றாக இது நீடித்து வருகிறது.

இந்நிலையில், அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் பசிபிக் பெருங்கடலின் தொலைதூர தீவு ஒன்றிற்கு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு விரைந்துள்ளது. குறிப்பாக, சுமார் 28 கிலோ எடையைத் தூக்கும் திறன் கொண்ட ‘தேங்காய் நண்டுகள்’ (Coconut Crabs) அதிகளவில் வாழும் அடர்ந்த இந்த தீவில், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல ஆய்வுகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போதைய புதிய ஆய்வு மற்றும் தேடுதல் நடவடிக்கை மூலம் அமீலியா ஏர்ஹார்ட்டின் 90 ஆண்டுகால மாயமான மர்மத்திற்கு இறுதியாக விடை கிடைக்கும் என சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top