பெருகும் கட்டடங்கள்… சுருங்கும் நீர்நிலைகள்! சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? சென்னை பல்கலை. அதிரடி ஆய்வு!

சென்னை நகரில் லேசான மழை பெய்தாலே பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது தொடர்கதையாகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்களைச் சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, சென்னையில் கடந்த சில தசாப்தங்களாகக் கட்டுப்பாடற்ற முறையில் அதிகரித்து வரும் கான்கிரீட் கட்டடங்களின் எண்ணிக்கையே வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகள் மூலமாகவும் முறையற்ற திட்டமிடலாலும் பெருமளவில் சுருங்கிவிட்டன. மேலும், நகரின் பசுமைப் பரப்பளவு மற்றும் மரங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதும் மழைநீரை இயல்பாக உறிஞ்சும் திறனை நிலப்பரப்பு இழக்கக் காரணமாகியுள்ளது.

இயற்கை வடிகால்களாகச் செயல்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் மறைந்துபோனதால், பெய்யும் மழைநீர் தடையின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டுமானால், எஞ்சியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு, நகரப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top