‘அர்னாப்’ புயல் எச்சரிக்கை: மிகத் தீவிரமடையும் வங்கக்கடல் காற்றழுத்தம்… தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிரமடைந்து ‘அர்னாப்’ புயலாக உருவெடுத்துள்ளடது. இது மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும், அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த ‘அர்னாப்’ புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகத்தின் சில இடங்களிலும் பரவலாக மழை கொட்டித் தீர்க்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் காரணமாகக் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் முடுக்கிவிடுமாறு கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top