பாகிஸ்தானின் குஜராத் பகுதியில் சொத்துத் தகராறு காரணமாகத் தனது சொந்தத் தம்பியைக் கொலை செய்த அண்ணன் ஒருவர், காவல் துறையினரின் சாமர்த்தியமான விசாரணையால் தற்போது கைதாகியுள்ளார்.
குஜராத் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையே நீண்ட நாட்களாகச் சொத்துப் பிரிவினை தொடர்பாகத் தகராறு நிலவி வந்தது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பியைக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், தான் இந்தச் சம்பவத்தின் போது செளதி அரேபியாவில் இருந்ததாகவும், தம்பியின் மரணச் செய்தி கேட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க மட்டுமே நாட்டிற்குத் திரும்பியதாகவும் கூறி குடும்பத்தினரையும் காவல் துறையினரையும் நம்ப வைக்க நாடகமாடினார்.
ஆனால், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்த போது, கொலை நடந்த சமயத்தில் அண்ணன் அப்பகுதியில் உலாவுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதன் மூலம் அவரது பொய்யான நாடகம் அம்பலமானது. உடனடியாக அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், அவரே கொலையாளி என்பதை உறுதி செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.