தேனி சிறை உடைப்பு சம்பவம்: தப்பிய மேலும் 2 கைதிகள் அதிரடி கைது – தீவிர வேட்டையில் போலீசார்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் உடனடியாகத் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிறையிலிருந்து தப்பிய 17 பேரில் 13 கைதிகளைக் காவல்துறையினர் நேற்று இரவே பல்வேறு இடங்களில் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த எஞ்சிய கைதிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் விடிய விடிய அடர்ந்த வனப்பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, தப்பியோடிய கைதிகளில் மேலும் இருவரைப் காவல்துறையினர் வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர். இதன் மூலம் பிடிபட்ட கைதிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தலைமறைவாக இருக்கும் எஞ்சிய 2 கைதிகளைப் பிடிக்க தேனி மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top