பாகிஸ்தானில் ஒரு ‘தாஜ்மஹால்’: மனைவிக்காக இந்து தொழிலதிபர் கட்டிய பிரமாண்ட மொஹட்டா அரண்மனை!

பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற மொஹத்தா அரண்மனை (Mohatta Palace). ‘கராச்சியின் தாஜ்மஹால்’ என்று அழைக்கப்படும் இந்த அரிய வரலாற்றுச் சின்னம், ஒரு இந்து தொழிலதிபரின் ஆழமான காதலின் அடையாளமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

1920-களின் பிற்பகுதியில், ஷிவ்ரத்தன் சந்திரரத்தன் மொஹத்தா என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரி தொழிலதிபர், தனது மனைவியின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரண்மனையைக் கட்டினார். கராச்சியின் கடுமையான கோடைகால வெப்பக் காற்றிலிருந்து தப்பிக்க, கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்றை நேரடியாக ஈர்க்கும் வகையில் இந்த அரண்மனை அற்புதமாக வடிவமைக்கப்பட்டது.

பிங்க் நிற ஜோத்பூர் கற்கள் மற்றும் மஞ்சள் நிற கற்களால் கட்டப்பட்ட இந்த மாளிகை, கலைநயமிக்க கட்டிடக்கலை பாணியில் செதுக்கப்பட்டுள்ளது. 1947 இந்திய-பாக் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் அரசின் வசம் வந்த இந்த அரண்மனை, தற்போது ஒரு அருங்காட்சியகமாகவும் கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது. ஒரு கணவன் தன் மனைவி மீது கொண்ட காதலின் பிரமாண்ட சான்றாக விளங்கும் இந்த வரலாற்றுப் பொக்கிஷம், சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top