இந்திய செல்வந்தர்களை குறிவைக்கும் பிரிட்டன் உயர்தர பள்ளிகள்: 6 முன்னணி கல்வி நிறுவனங்கள் படையெடுப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கோடீஸ்வரர்கள் மற்றும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனின் முன்னணி மற்றும் உயர்குடியினருக்கான ஆறு முக்கிய தனியார் பள்ளிகள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

பிரிட்டனின் பாரம்பரியமிக்க இந்தக் கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் நிலவும் இமாலய சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் தரமான மற்றும் சர்வதேச அளவிலான கல்விக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பெரும் தொகையைக் கட்டணமாக வசூலித்து லாபம் ஈட்டுவதே இவற்றின் முக்கிய நோக்கம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே சில சர்வதேசப் பள்ளிகள் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் சூழலில், இந்த புதிய பிரிட்டன் பள்ளிகளின் வருகை இந்தியக் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தையும், கடுமையான போட்டியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top