ஒரே ஒரு முடிவு… பசிபிக் பெருங்கடல் தீவில் 3 ஆண்டுகளாக பரிதவிக்கும் இலங்கை பெண்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான குக் தீவில், இலங்கையைச் சேர்ந்த 50 வயதான ருச்சிரா ரணசிங்கே என்ற பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான முறையான போக்குவரத்து விசா (Transit Visa) கிடைக்காததே இவரது இந்த பரிதாப நிலைக்கு முதன்மை காரணமாகும்.

வாழ்க்கை சூழல் காரணமாக குக் தீவிற்குச் சென்ற இவர், மீண்டும் தாய்நாடான இலங்கைக்குத் திரும்பத் திட்டமிட்டார். ஆனால், வழியில் பயணிக்க வேண்டிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இவருக்குப் போக்குவரத்து விசா வழங்கத் தொடர்ச்சியாக மறுத்துவிட்டன. இதனால், பசிபிக் பெருங்கடலின் நடுவே உள்ள மிகச்சிறிய தீவை விட்டு வெளியேற முடியாமல் அவர் முடங்கியுள்ளார்.

முறையான விசா அனுமதி இல்லாததால், தனது குடும்பத்தைப் பார்க்க முடியாமலும், தாய்நாட்டிற்குச் செல்ல முடியாமலும் ருச்சிரா பெரும் மன உளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளார். சர்வதேச அமைப்புகளும் இலங்கை தூதரகமும் தலையிட்டு, தமக்கு தாய்நாடு திரும்ப உதவ வேண்டும் என அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top