ஆந்திர கடலில் மாயமான 9 காசிமேடு மீனவர்கள்: 48 மணி நேரமாகத் தொடரும் சோகம் – கலக்கத்தில் குடும்பத்தினர்!

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலக் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகில் 9 மீனவர்கள் ஆந்திரக் கடல் பகுதிக்குச் சென்றனர். ஆனால், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடமிருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர்களது தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் படகின் உரிமையாளரும், அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்களைக் கண்டறியக் கடலோரக் காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top