சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காமல் மாயமாகியுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பத்தினரும், சக மீனவர்களும் பெரும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
விசையடகு மூலம் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள், வழக்கமான நேரத்தைக் கடந்தும் கரை திரும்பவில்லை. தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து படகின் உரிமையாளர் கூறுகையில், மீனவர்களைத் தொடர்பு கொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தும் பலனில்லை என்றும், உடனடியாகத் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவலறிந்த கடலோரக் காவல் படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மாயமான மீனவர்களைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாயமான மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழக அரசுக்கும், இந்திய கடலோரக் காவல் படைக்கும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.